• May 05 2024

'வாத்தி' படத்தில் தனுஷ் பாஸா..? பெயிலா..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.


தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்த வண்ணமே இருக்கின்றனர்.

அந்தவகையில் வாத்தி படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் "வாத்தி படத்தில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். எமோஷனல் காட்சிகள் நன்றாக கனெக்ட் ஆகின்றன. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன. வெங்கி அட்லூரியின் நேர்த்தியான படமாக இது இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் இன்னொரு நெட்டிசனின் ட்விட்டர் பதிவில் "தனுஷின் மற்றுமொரு ஃபீல் குட் படமாக வாத்தி அமைந்துள்ளது. நிறைய எமோஷன்களும், புல்லரிக்க வைக்கும் தருணங்களும் படத்தில் உள்ளன. தனுஷின் நட்ப்பு வேறலெவல். பிஜிஎம், டயலாக் எல்லாம் பின்னிட்டாங்க. நிச்சயம் இது ஒரு ஹிட் மெட்டீரியலாக இருக்கும்" என கூறியுள்ளார்.


மற்றொருவரின் பதிவில் "வாத்தி ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக உள்ளது. இரண்டு பாதிகளின் இறுதியிலும் நல்ல காட்சிகள் இருந்தாலும், அது நம்பத்தகாத ஒன்றாக உள்ளது. படம் பாதி தமிழிலும் பாதி தெலுங்கிலும் எடுத்துள்ளார்கள். தனுஷுக்கு கேக்வாக் ரோல் இது. சம்யுக்தா மற்றும் கென் கருணாஸின் நடிப்பும் சூப்பர். ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் ஆன படம் தான்" என குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் "வாத்தி டப்பிங் படம் போன்ற உணர்வை தருகிறது. சொல்ல வர விஷயம் ஓகே ஆனால் சொன்ன விதம்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. முதல் பாதி சுமார். அங்கங்க 2 சீன் நல்லா இருக்கு" என மற்றும் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.


மேலும் இன்னொருவர் கூறுகையில் "ரசிகர்களை ஊக்குவிக்கும் படங்களின் பட்டியலில் வாத்தி இணையும். வழக்கம் போல தனுஷ் மாஸ் காட்டி உள்ளார். திரைக்கதைக்காகவே இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு பாராட்டுக்கள். ஜிவி பிரகாஷ் பின்னணி இசை சிறப்பு. சமுத்திரக்கனி, சம்யுக்தா, கென் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள். மொத்ததில் வாத்தி செஞ்சுரி அடித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.


இவ்வாறான விமர்சனங்களை எல்லாம் பார்க்கும்போது வாத்தி படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இதனால் தனுஷ் இப்படத்தில் பாஸானாரா..? இப்படம் எந்த அளவு வசூலை வாரிக் குவிக்கும் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதேபோன்று மேலும் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!



Advertisement

Advertisement

Advertisement