• May 09 2024

பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த சண்டை... அதிரடியாக விசித்ரா, யுகேந்திரனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை... பரபரப்பான ப்ரோமோ வீடியோ இதோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் கடந்த 7-ஆண்டுகளாகத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பல துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டு நேற்று முன் தினம் ஆட்டம், பாட்டத்துடன் ஆரம்பமாகி இருக்கின்றது. 


வழமையாகவே பிக்பாஸ் வீடு என்றாலே சண்டை கட்டாயமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் இரண்டாவது நாளே சண்டை ஆரம்பமாகி இருக்கின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


அதில் பிக்பாஸ் "ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கிறவங்க மட்டும் தான் சமைக்கணும் என்பது ரூல். இதனை விசித்ரா, யுகேந்திரன் மீறியதால் நீங்க இரண்டு பேரும் இனி ஸ்மால் பாஸ் வீட்டில் தான் இருக்கணும்" என்கிறார். பதிலுக்கு பிரதீப் ஆண்டனி "அங்க நாமினேட் ஆகாத யாராவது 2பேர் இருந்தால் இங்க அனுப்பி விடுங்க" என்கிறார்.


அதற்கு விசித்ரா "திடீரென்று அங்க இருந்து எதுக்கு இரண்டு பேரை மாற்றி இங்க வரணும் என்று நீங்க சொன்னீங்க" எனக் கோபத்துடன் கேட்கின்றார். பதிலுக்கு பிரதீப் ஆண்டனி "நீங்க இரண்டு பேர் போனால் கடனை அடைக்க எங்களுக்கு இரண்டு பேர் வேணும் எல்லோ" என்கிறார்.


அதற்கு விசித்ரா "எங்க இரண்டு பேருக்கும் சமமான பிளேயர்ஸ் அங்க இருக்காங்களா இங்க வர்றதுக்கு" எனக் கேட்கின்றார். பதிலுக்கு விஜய் வர்மா "நீங்க என்ன பேசுறீங்க என்று உங்களுக்கு புரியுதா" எனக்கேட்டு பிரதீப் ஆண்டனியைத் திட்டுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement