• May 03 2024

'மாவீரன்' படம் எப்படி உள்ளது..? முதல் விமர்சனம் இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜேவாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்தாலும்  தன்னுடைய சிறப்பான திறமை மற்றும் திட்டமிடல் மூலம் தற்போது சிறப்பான உயரத்தை பிடித்துள்ளார். கோலிவுட்டில் விஜய், அஜித்திற்கு அடுத்தப்படியாக முன்னணி ஹீரோவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார்.


இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் உருவாக்கியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கின்றார். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படமானது ஜூலை நாளை சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்தவகையில் இப்படத்தின் உடைய முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. 


இந்த விமர்சனத்தை நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அந்தவகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ' மாவீரன் சக்ஸஸ்' என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இப்படத்திற்கு ஒலிக்கும் குரலாக நடித்துள்ள விஜய் சேதுபதி 'மாவீரன்' படத்தை முழுமையாக பார்த்துவிட்டு, ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்து ' படம் சூப்பர்' என பாராட்டி பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே இதன் மூலமாக 'மாவீரன்' படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

Advertisement

Advertisement

Advertisement