• Jan 21 2025

சீயான்-63 படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட் இதோ..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் சீயான்-63வது திரைப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் அதிகார பூர்வமான அப்டேட் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கும் ஹீரோயினி தொடர்பான செய்தி வைரலாகி வருகிறது.


சீயான் விக்ரம் வேறுபட்ட கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிப்பத்தில் பிரபலமானவர். இவரின் நடிப்புக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சீயான் விக்ரம், இயக்குநர் மாவீரன் அஷ்வின், தயாரிப்பாளர் அருண் விஸ்வாவுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைபடம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினியை படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் சீயானுக்கு இது63வது திரைப்படம் இதற்கு முன் தங்கலான் என்ற வெற்றி படத்தினை கொடுத்தார். தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகனன் நடிக்க இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement

Advertisement