விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜெப்ரி கடந்த வாரங்களில் நடந்த எலிமினேஷனில் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி லைவில் பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி வந்த நிலையில், கடைசி மூன்று வாரங்களாக டபுள் எவிக்சன் நடைபெற்று வருகிறது. அந்த எலிமினேட்டில் சிக்கி வெளியேறிய ஜெப்ரி பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ளார். " வெளிய வந்த பின்னர் மக்கள் நிறைய பேர் வாழ்த்துறாங்க உள்ள எப்படிபார்த்தமோ அப்படித்தான் உங்கள வெளிய பார்க்குறோம் என்று சொன்னாங்க அதுவே எனக்கு பெரிய விஷயமா இருந்தது" என்று கூறினார்.
மேலும் "அடுத்து சினிமா உள்ள போகலாம்னு இருக்கேன் மறுபடியும் மக்களை சிரிக்க வைக்க வருவேன். உள்ள சவுந்தர்யா பற்றி சொல்லனும்னா அவங்க லோவா இருந்தாலும் சரி இல்ல நாங்க லோவா இருந்தாலும் சரி ஏன் சண்டை போட்டு இருந்தாலுமே சவுந்தர்யா போயிட்டு பேசுவாங்க ரொம்ப நல்ல பொண்ணு. வெளிய வந்த பிறகு முதலில் சத்தியாவை போய் பார்த்தேன். எனக்கு ரொம்ப புடிச்ச ஒருத்தர்னா சத்தியா மட்டும் தான். நான் உள்ள இருந்து இருந்தா கேம் செஞ்சாரா இருந்து இருப்பேன். எனக்கு அங்க உறுதுணையா இருந்தது சத்தியா, அன்ஷிதா சுனிதா நிறைய மோட்டிவேஷன் பண்ணாங்க என்று கூறினார்.
உள்ள இருக்குறதுல தீபக் அண்ணா தான் நல்ல வலுவான போட்டியாளர். விஜய் சேதுபதி நல்ல ஒரு வழிகாட்டி. வெளிய வந்த பின்னர் சவுந்தர்யா, பவித்ராவை மிஸ் பண்ணுறேன். பிக் பாஸ் வீடு நிறைய பாடங்களை சொல்லி கொடுத்து இருக்கு என்று தனது பிக் பாஸ் அனுபவங்கள் குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பேசியுள்ளார் ஜெப்ரி.
Listen News!