• May 18 2024

பிரபல நடிகையின் வீட்டில் ஒன்று கூடிய திரையுலகத்தினர் - வைரலாகும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழ்பவர் நடிகை ஆலியா பட். சினிமா பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை மகேஷ் பாட் ஒரு பிரபல தயாரிப்பாளர் அதுமட்டுமல்லாது இவரது தாயார்  சோனி ராசா ஒரு முன்னாள் நடிகை ஆவார். இவர் தனது தனித்துவமான நடிப்பினாலும், கடின உழைப்பாலும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.

2012 ஆம் ஆண்டு வெளி வந்த ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே சிறந்த நடிகைக்கான சைமா விருதை பெற்றுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்துள்ள வெற்றி திரைப்படம் பிரம்மாஸ்திரம் ஆகும். வசூலில் மிகப்பெரிய சாதனையை இத்திரைப்படம் படைத்துள்ளது.

தற்போது இவர் குறித்த சுவாரசியமான விடயம் ஒன்று வெளிவந்துள்ளது . கர்ப்பமாக இருக்கும் ஆலியா பட்டின் வளைகாப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.அந்த நிகழ்விலிருந்து வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனைக் காணலாம்


இந்த நிகழ்வில் பாலிவுட்டின் முன்னணி பிரபலங்களான கரிஸ்மா கபூர், வித்திஸ் பூஜா, கரீனா கபூர், ஸ்வேதா நந்தா, விதிமா கபூர், சோனி ராசா, பட்டின் போலா உட்பட பல ஹிந்தி திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து இந்த நிகழ்வை அலங்கரித்தனர். 


அது தொடர்பான புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ-


Advertisement

Advertisement