பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பரபரப்பாகிய ஓடிய நிகழ்ச்சி தான் “தமிழா தமிழா”.
இந்த ஷோவில் விவாதிக்கப்படும் விடயங்கள் அனைத்தும் இன்றைய சமூகத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
நீயா நானா நிகழ்ச்சி போல் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு தனி ரசிக பட்டாளமே இருக்கின்றது.இந்நிகழ்ச்சியினை பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்தவாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.இதில் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அசைவமாக இருந்து சைவ பிரியர்களாக மாறியவர்கள் ,அசைவ பிரியர்கள் என்ற தலைப்பில் விவாதங்கள் நடந்தான்.
அதில் ''முதியவர் ஒருவர் ''கறியை சாப்பிடுறதுக்கு குடுத்து வைக்கோணும் சார் கிடா எலும்புகளை வெட்டி அத கொத கொதன்னு கொதிக்க விட்டு அந்த எலும்புகளை கடித்து இழுத்து மீசையை முறுக்கி விட்டு சாப்பிடாலே தெரியும்..என பேசி அரங்கத்தை மிரள வைத்தார்.
அதற்கு அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறிய ஒருவர் ''வாழையிழை போட்டுட்டு முருங்கைக் காய்,மாங்காய் ,கத்தரிக்காய் சாம்பார் வைச்சிட்டு பாருங்க அதோட டேஸ்ட் எதிலையும் வராது சார் என்றார்.
இதற்கு அந்த முதியவர் அத பாத்தாலே நமக்கு பிடிக்காதே ..ஒரு விசேஷத்துக்கு போன அங்க சாம்பார்ன்னா மொய் எழுதிட்டு ஓடி போய் ஹோட்டலில் பிரியாணி சாப்பிடுவன் சார் என கூறி அரங்கத்த சிரிப்பில் மூழ்க வைத்தார்.
Listen News!