சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி, ரேணுகா, நந்தினி, அப்பத்தா அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் "அப்பத்தாவை நானே போட்டுத்தள்ளவா" எனக் கதிர் குணசேகரனிடம் கேட்கின்றார். பதிலுக்கு குணசேகரன் "கல்யாணம் முடிக்கப்போற மாதிரி சொல்லுறாய், கிழவியை முடிக்கணும்பா, அது சாதாரண வேலை எல்லாம் இல்லை" எனக் கூறுகின்றார்.
மேலும் தர்ஷினி அப்பத்தாவிடம் "40 வீதம் ஷேர் இவங்களுக்காக தான் வச்சிருக்கீங்க என்று தெரியும்" என வீட்டுப் பெண்களைக் காட்டிச் சொல்கின்றார். பதிலுக்கு அப்பத்தா "அது இவங்களுக்காக தான் என்று உனக்கு யார் சொன்னது" எனக் கேட்கின்றார். அப்பத்தா இவ்வாறு கேட்டதும் ஜனனி, ரேணுகா, நந்தினி அனைவரும் அதிர்ச்சியுடனும் அப்பத்தாவை சந்தேகத்துடனும் பார்க்கின்றனர்.
எனவே இவை யாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது அப்பத்தாவின் 40% ஷேர் வீட்டுப் பெண்களுக்கும் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே அந்த 40%ஷேர் யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!