• May 09 2024

விஜய் டிவி நிஷாவின் சொந்தத் தம்பியைப் பார்த்திருக்கின்றீர்களா?- முதன்முறையாக வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்ட போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எதிலும் சாதிக்க திறமை இருந்தால் போதும், அழகு ஒரு பொருட்டே இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து, பலருக்கு எடுத்து காட்டாக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா. 

இவர் காமெடி திறமையை நிரூபிக்க, கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை வாயிக்கு வந்த படி பேசினாலும், அவர்கள் அனைவரும் அறந்தாங்கி நிஷாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவது தான் இவருடைய மிகப்பெரிய வெற்றி.


 அதே நேரத்தில், வளர்ந்து வரும் நேரத்தில் குழந்தை பெற்று கொண்டால் தன்னுடைய கேரியர் பாதித்துவிடும் என என்னும் பலருக்கு இவர் சிறந்த உதாரணம். இவர் கர்ப்பமாக இருக்கும் போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 


அதனை தன்னுடைய சவாலாகவே ஏற்று, சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டும் இன்றி, அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.விஜய் டிவியால் கிடைத்த பிரபலம், இவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்த்தி சென்றது. ஒரு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 


எவ்வளவு தான் சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய குடும்பத்துடனும் நேரம் செலவழிக்க தவறாத அறந்தாங்கி நிஷா தற்பொழுது இன்று முதன் முறையாக தனது தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்த் தெரிவித்து அவருடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதில் என் முதல் குழந்தை என் உடன் பிறந்தவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கேப்ஷனாக போட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது வாழ்ததுக்களைத் தெரிவித்து வருவதோடு இவர் உங்கள் சொந்தத் தம்பியா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement