• Apr 25 2024

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா-இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 80களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடனம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.


இவர் குடும்ப வறுமையால் சினிமா நடிகர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்தவர் வினு சக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமாகி பின் பலமொழி சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஜோடியானார். இவரது மயக்கும் கண்ணுக்கே தனி ரசிகர் பட்டாளமும் காணப்பட்டது.

இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த சில்க் ஸ்மிதா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் செப்டம்பர் 23ம் தேதி 1996ம் ஆண்டு சென்னையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பிற்கு அவரது காதலன் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.



இருப்பினும் இன்னும் சரியான காரணம் வெளியாகாமல் மர்மமாகவே இருக்கின்றது.

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவை தாண்டி அவரது குடும்பத்தினர் பற்றி எதுவும் ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதாவது சிலக் ஸ்மிதா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள், 




 

Advertisement

Advertisement

Advertisement