• May 05 2024

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சென்னையில் இருக்கும் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- சுற்றிக் காட்டிய ஜான்விகபூர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரைத் தொடர்ந்த இவருடைய மகளான ஜான்வி கபூர் தற்பொழுது பாலிவூட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அத்தோடு இவர் கடந்த 2018 ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.


சமீபத்தில் ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான ‘மில்லி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேர்மறை விமர்சனங்களை பெற்றது.ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் மும்பையில் வசித்து வருகிறார். ஆனால் நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வீடு சென்னையில் இருக்கிறது. 


இந்த நிலையில் தனது தாய் வீட்டைச் சுற்றிக் காட்டி வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தனது அம்மா பார்த்து பார்த்து வெளிநாடுகளில் இருந்து வாங்கி வந்த பொருட்கள் என கூறிக்கொண்டே வீட்டை சுற்றி காட்டுகிறார். 


‘அம்மா இறந்த பின்பு இந்த வீட்டிற்கு வரவில்லை, அப்பா இந்த வீட்டை மீண்டும் ரிடெக்கரேட் செய்து என்னையும், எனது தங்கையையும் சர்பிரைஸ் செய்தார்’ என கூறுகிறார்.பெரும்பாலான தனது குழந்தை பருவத்தை இந்த வீட்டில் தான் செலவிட்டதாக ஜான்வி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement