• May 02 2024

'பிக்பாஸ்' கஸ்தூரியின் மகனை பார்த்திருக்கின்றீர்களா... அட இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பெண் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவரே நடிகை கஸ்தூரி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது 1992 இல் இடம்பெற்ற 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இவர் நடிப்பில் உருவான படங்களில் 'ஆத்தா உன் கோவிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை' போன்ற பல படங்கள் இன்றும் நம்மால் மறக்க முடியாது. இவ்வாறாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த கஸ்தூரி 'சக்கரவர்த்தி' என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் கால் பதித்திருக்கின்றார்.


இவ்வாறாக தமிழில் மட்டுமல்லாது பல மொழிப் படங்களிலும் மாஸ் காட்டி வந்த கஸ்தூரி விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சீசன் 3 இலும் போட்டியாளராக களமிறங்கி கலக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக அனைத்துத் துறைகளிலும் சாதனை நிலை நாட்டி வருகின்ற இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

அதில் எப்போதும் வண்ண வண்ண உடைகளை விதம் விதமாக அணிந்து புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போதும் தன்னுடைய மகனுடன் இணைந்து எடுத்த க்யூட் ஆன புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். 


அதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்களிற்கு இந்தளவு பெரிய மகன் இருக்கானா" எனக் கேட்டு தமது கமெண்டுகளைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement