• May 05 2024

அசுரன் பட நடிகையான மஞ்சுவாரியார் கடத்தப்பட்டுள்ளாரா?- பிரபல இயக்குநர் போட்ட பதிவால் பரபரப்பான திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகை தான் மஞ்சு வாரியர் . மலையாள நடிகையான இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

இவர் பிரபல மலையாள நடிகரான திலீப்பை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ததோடு தற்பொழுது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் மலையாள இயக்குநர் சணல் குமார் தனது பேஸ்புக் பதிவில் மஞ்சு வாரியார் சில கந்துவட்டிக்காரர்கள் பிடியில் சிக்கி இருக்கிறார் என்று பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் பகிர்ந்துள்ள செய்தி குறிப்பில், மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நான் கூறியது ​​பலரும் இந்த பிரச்சினையை நகைச்சுவையாகப் பார்க்க முயல்கின்றனர். கேரளாவில் உள்ள முக்கிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிக்க முயல்வது அச்சமாக உள்ளது.

நான் எழுப்பிய இந்த பிரச்சினை தேசிய அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பற்றியது என்பதால், தேசிய ஊடகங்கள் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இப்பொழுது, இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement