• May 06 2024

இலங்கையில் காதல் ரோஜேவே பாடலை ஹிந்தியில் பாடிய ஹரிகரன்- திடீரென vibe ஆகி தமிழில் பாடிய ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 8 months ago

Advertisement

Listen News!


இந்திய அளவில் பின்னணி பாடகர்களில் முதல் வரிசையில் இருப்பவர் ஹரிஹரன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் ரசிகர்களை தனது குரலால் வசியம் செய்து கட்டிப்போட்டு வைத்துள்ள இவர் இன்னொரு பக்கம் ஆல்பம் பாடல்கள் மூலமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார். 

அதே சமயம் கடந்த 2005ல் குஷ்புவுடன் இணைந்து பவர் ஆப் உமன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஹரிஹரன். இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் என்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.அன்பே அன்பே, வெண்ணிலவே வெண்ணிலவே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, என்னை தாலாட்டா வருவாளா, தொடுவானம் என சொல்லிக்கொண்டே போகலாம்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக பாடல்கள் பாடியுள்ள இவர் மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்களா மற்றும் போஜ்பூரி என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களையும் 200க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.

அத்தோடு இவர் பல இசை மேடைகளிலும் பா வருகின்றார். அந்த வகையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் காதல் ரோஜாவே பாடலை ஹந்தியில் பாடியுள்ளார். இந்தப் பாடலைக் கேட்ட ரசிகர்கள் அவருடன் சேர்ந்து பாடி vibe ஆகியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement