• Mar 19 2024

வெளியானது ஹன்சிகாவின் திருமண ட்ரெய்லர்.. வாவ் ரொம்ப நல்லா இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து டாப் நாயகியாகத் திகழ்ந்து வருகின்றார். 


மேலும் உடல் எடை அதிகரித்தமையினால் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். இவ்வாறு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வரிசையாக பல படங்களில் நடித்துவரும் ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். 


நெருக்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான ஒரு சில புகைப்படமங்கள் மட்டுமே இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.


இவர்களது திருமணத்தின் முழு வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஓடிடி தளத்தில் ‘ஹன்சிகாஸ் லவ் ஷாதி ட்ராமா’ என்ற தலைப்புடன் வெளியிட இருக்கின்றது. இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி திருமண வீடியோவின் டீசரானது சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து இதன் ட்ரெய்லரை ஹாட் ஸ்டார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement