• May 24 2026

பிரண்ட்ஸுடன் என்ஜாய் பண்ணும் ஹன்சிகா.. டூ பீஸ் ஆடையில் வெளியிட்ட போட்டோஸ் வைரல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவரான சோஹேல் கதூரியாவிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த அவர், சமீபத்தில் சட்டப்படி விவாகரத்தையும் பெற்றார்.

விவாகரத்து குறித்து ஹன்சிகா முன்பே, “தவறான ரயிலில் ஏறினால் அதிலிருந்து இறங்கிவிடுவது தான் நல்லது; எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று சுலபமாகவும் தெளிவாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நண்பர்களுடன் மொரிஷியஸ் சென்றுள்ள ஹன்சிகா, அங்கிருந்து கடற்கரை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


குறித்த புகைப்படத்தில் ஹன்சிகா டூ பீஸ் ஆடையில் காணப்படுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள், விவாகரத்துக்கு பிறகு  இப்படியெல்லாம் புகைப்படம் போடுறாங்களே.. என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வாழ்க்கையை புதிய தொடக்கத்துடன் முன்னெடுத்து செல்லத் தயார் என்ற எண்ணத்தை ஹன்சிகா வெளிப்படுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement