• May 18 2024

இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் கிடைத்திருக்கும்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனன்யா போட்ட உருக்கமான வீடியோ

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், கடந்த வாரத்தில் அனன்யா போட்டியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

 இதனிடையே, நிகழ்ச்சியின் போட்டியாளர் பவா செல்லதுரையும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். போட்டியில் அதிகமான பிரபலங்கள் யாரும் இணையாத நிலையிலும் நிகழ்ச்சியின் துவக்கம் முதலே அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. ஒவ்வொரு போட்டியாளரும் போட்டி, பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சந்தித்து வருகின்றனர். 


கடந்த வாரத்தில் விஜய் கேப்டனாக இருந்த நிலையில், இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நடிகர் விக்ரம் கேப்டனாக தேர்வாகியுள்ளார்.மேலும் அனன்யா டாட்டூ விஷயத்திற்காக விசித்ரா உடன் சண்டை போட்டதை தவிர இந்த வாரத்தில் எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் வெளியில் வந்த அனன்யா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றி என கூறி இருக்கிறார்.இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் உங்கள் அன்பு இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும் என அவர் கூறி இருக்கிறார் இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement