• Jan 19 2025

ஜிவி பிரகாஷுக்கு பலருடன் தொடர்பு.. சைந்தவியின் டைவர்ஸ் பற்றி தாறுமாறாக விமர்சித்த பத்திரிகையாளர்?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் சிறந்த காதல் ஜோடியாகவும், சிறந்த தம்பதியினராகவும் வாழ்ந்து வந்தவர்கள் தான் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி. எனினும் இவர்கள் தற்போது ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்கள். இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என இருவரும் தமது சோசியல் மீடியாவில் தெரிவித்து இருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் பள்ளி காலத்தில் படிக்கும் போதே சைந்தவியை  காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஹாலிவுட்டில் பேவரைட் ஜோடியாக திகழ்ந்து வந்த இவர்கள், தங்களது திருமண வாழ்க்கை முடித்துக் கொள்வதாக கூறினார்கள். மேலும் இது தொடர்பில் சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் எழவும், தமது விவாகரத்து பற்றி இஷ்டத்துக்கு எழுதாதீர்கள். எங்களுடைய பிரைவேசிக்குள்  நுழைய வேண்டாம் எனவும் தெரிவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் சேகுவார் இது தொடர்பில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தங்கள் விவகாரத்து தொடர்பாக எதுவும் பேசக்கூடாது. உங்களுக்கு பிரைவேசி வேண்டும் என்றால் ஏன் திருமணம் செய்து கொண்டு அதை முறித்துக் கொண்டீர்கள். அதையும் பொது வெளியில்  சொல்கின்றீர்கள். பின்பு அதையே ஏன் சோசியல் மீடியாவில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பதிவிடுகிறீர்கள். அப்படி பொதுவெளியில் சொன்னால் எல்லோரும் அது குறித்து பேசுவார்கள் தானே. ஜிவி பிரகாஷுக்கு பலருடனும் தொடர்பு உண்டு அதனால்தான் சைந்தவி பிரிந்து சென்றார் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement