• May 04 2024

இன்ஸ்டாவில் பனியனுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட ஜி.பி முத்து...தாறுமாறாக கலாய்த்து வரும் நெட்டிசன்ஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

டிக் டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.

இடையில் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் பங்குபெற்றார், ஆனால் சில நாட்களிலேயே என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என கூறி வெளியேறினார்.

அதன்பிறகு சில படங்கள், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.

தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், ஆதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் பனியனுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தாறுமாறாக பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement