• May 10 2024

ராதிகாவிடமே நீ பேய் மாதிரி கத்திற பாக்கியா தான் பெஸ்ட் என சொன்ன கோபி- குஷியில் ராமமூர்த்தி எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி தனது நண்பனிடம் பாக்கியா பழனி கூட பழகுவது குறித்து பொறாமைப்பட்டு பேசிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு ராதிகாவுடன் வாழுற வாழ்க்கை நிம்மதி இல்லை என்றும் சொல்லி நிறைய குடித்து மட்டையாகி விடுகின்றார்.


பின்னர் வீட்டுக்கு வரும் கோபி ராதிகாவிடம் நீ வேஸ்ட் பேய் மாதிரி கத்திற உன்னோட வாழவே பிடிக்கல பாக்கியா தான் பெஸ்ட் அவ கூட இருக்கும் போது நிம்மதியா இருந்தேன். ஆனால் உன்னோட வந்ததுக்கப்பிறம் கொஞ்ச நிம்மதி கூட இல்லை என கத்துகின்றார். கோபியின் இந்த நடவடிக்கையைப் பார்த்து ராதிகா அதிர்ச்சியடைகின்றார்.

தொடர்ந்து விடிந்ததும் ராதிகாவை சமாளிக்க முயற்சி செய்கின்றார். ஆனால் ராதிகா நீங்க குடிக்கிறதால விட்டுட்டு போகப் போகின்றேன் எனக் கூறுகின்றார். இருந்தும் கோபி காலில் விழுந்து எல்லாம் மன்னிப்புக் கேட்கிறார். அப்படியிருந்தும் ராதிகா மன்னிக்காமல் இருப்பதோடு குடிச்சிட்டு வந்ததற்காக ராமமூர்த்தியும் கோபியைத் திட்டுகின்றார்.


பின்னர் ராதிகா கோபத்தில் ரூம் கதவை பூட்டிவிட்டு உள்ளே செல்கின்றார். கோபி வெளியில் நின்று கதவைத் தட்டுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது. பின்னர் அடுத்து வரும் எப்பிஷோட்டில் கோபி பாக்கியாவை மறித்து பழனி பற்றி கேட்க பாக்கியா ஆங்கிலத்தில் பேசிவிட்டு செல்கிறார். இதைக் கேட்ட கோபி அதிர்ச்சியடைகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement