• Sep 27 2023

ஈஸ்வரி சொன்னதைக் கேட்டு கத்திய கோபி- பயந்து போய் திருக்கிட்டு எழுந்த ராதிகா- கோபப்பட்ட எழில்- Baakiyalakshmi Serial

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா ரூம் தேடிக் கொண்டு கார் ஓட்டிக் கொண்டிருக்கின்றார் . அப்போது ஒரு இடத்தைப் பார்த்ததும் இதில் ஒரு ஹொட்டல் இருக்கின்றது. அங்கு போய் ரூம் கேட்பமா என்று போகின்றனர். காரினால் இறங்கிப் போகும் போது அங்கே இடையிடையே ஆண்கள் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து பயந்து உள்ளே போகின்றனர்.


பின்னர் ரூம் புக் பண்ணியதும் எழில் எடுத்து போன் பேசுகின்றார். அப்போது பாக்கியா நீ புக் பண்ணின ஹொட்டல்ல ரூம் இல்லை என்று சொல்ல, எழில் அதெப்பிடி புக் பண்ணின ரூமைத் தராமல் இருப்பாங்க பொறு நான் போன் பண்ணிக் கேட்கின்றேன் என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் வேணாம் நாங்க வேற ரூமுக்கு வந்திட்டோம் என்று சொல்கின்றார்.

பின்னர் ரூமுக்குள் போய் இருந்ததும் ரூமைப் பார்த்ததும் ஈஸ்வரி சந்தோஷப்படுகின்றார். அப்போது இவர்கள் பேசிட்டு இருக்கும் போது போலீஸ் வந்து கதவைத் தட்ட எல்லோரும் பயப்பிடுகின்றனர். இப்போது பாக்கியா தாங்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற உண்மையை சொல்ல அவர்கள் பார்த்து விட்டு போகின்றனர். 


இதனால் பாக்கியாவைப் பார்த்து ஈஸ்வரி, நாங்க ஏதும் தப்பான இடத்திற்கு வந்திட்டோமா என்று விசாரிக்கின்றார். அப்போது பாக்கியா அப்படி இல்லை எல்லாம் இல்லை அத்தை நீங்க நிம்மதியாத் துாங்குங்க என்று சொல்லி விட்டு மற்ற ரூமுக்குள் செல்வியையும் ஈஸ்வரியையும் அனுப்பி வைக்கின்றனர். அந்த நேரம் பார்த்து கோபி ஈஸ்வரிக்கு போன் பண்ணுகின்றார்.


ஈஸ்வரி நடந்தது எல்லாம் சொல்ல,கோபி பயந்து போய் கத்த துாக்கத்தில் இருந்த ராதிகா எழும்பி விடுவதோடு எங்களை விட்டிட்டு கிளம்பி அப்பிடியே போக வேண்டியது தானே எதுக்கு இங்க இருந்து போன் பண்ணி எங்க உயிரை எடுக்கிறீங்க என்று கேட்டுத் திட்டுகின்றார். மறுபுறம் பாக்கியாவும் இனியாவும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement