• May 04 2024

எங்களுக்கு சோறு மட்டும் போடுங்க நாங்க ஒன்றும் பெரியவங்க கிடையாது- பத்திரிகையாளர் சந்திப்பில் கடுப்பாகிய சத்தியராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சத்தியராஜ் நாங்க நடிகர் மட்டும் தாங்க எங்களை கொண்டாட எல்லாம் செய்யாதீங்க என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய விடயம் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சத்தியராஜ். இவர் ஆரம்ப காலங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார்.அதனைத் தொடர்ந்து 90களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதிலும் குறிப்பாக பாகுபலி படத்தில் இவர் நடித்த கட்டப்பா என்னும் கதாப்பாத்திரம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.


இந்த நிலையில் இவர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் ஏங்க எங்களை தலையில வைச்சு கொண்டாடுறீங்க. நாங்க சும்மா நடிப்புங்க ஸ்ராட் காமெரா ஆக்ஷன் என்றால் டான்ஸ் ஆடுவோம் பயிட் பண்ணுவோம்.தப்புங்க நாங்க ஊடங்கள் மேல் இருக்கிற பெரிய வருத்தமே இது தான் எங்களுக்கு சோறு போடுங்க எங்களை தலையில துாக்கி வைச்சு கொண்டாடாதீங்க. இதெல்லாம் தப்புங்க நாங்க ஒன்றும் பெரியாரோ அம்பேத்கரோ இல்லைங்க எங்களை இப்படி எல்லாம் நினைக்காதீங்க என்று கூறியுள்ளார்.


மேலும் நடிகரை சாதாரண மனிதராகவே பாருங்களட என இவர் கூறிய கருத்தானது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement