• May 08 2024

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- தமன்னா கொடுத்த ரியாக்ஷன்- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். அண்மையில் தான் இப்படத்தின் ஷுட்டிங் யாவும் நிறைவுக்கு வந்ததோடு சில தினங்களுக்கு முன்னர் காவாலா என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் spotify என்று பல தளங்களில் தொடர்ச்சியாக இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது . இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் தமன்னா தனது காவாலா பாடலை Recreate செய்து ஆடி வெளியிட்ட வீடியோ பல கோடி லைக்ஸ் பெற்றது. பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்,


 இது இன்னும் ஒரு படி உச்சத்திற்கு சென்று உலக புகழ் பெற்ற பாடகி ஷகிராவின் வக்கா வக்கா பாடலோடு ஒப்பிடப்பட்டுள்ளது. ஒரு ட்விட்டர்வாசி வக்கா, வக்கா பாடலின் ஆடியோவை காவாலா பாடலின் விடியோவுடன் மேட்ச் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த தமன்னா உண்மையில் இந்த இணைப்பு மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறி சந்தோஷம் அடைந்துள்ளார். 


ஜெயிலர் திரைப்படம் நெல்சன் திலீப் குமாரின் திரை வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பாலிவுட் உலகில் இருந்து ஜாக்கி ஷெராஃப், கன்னட உலகில் இருந்து சிவராஜ் குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement