தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் கவுதம் மேனன். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் அடுத்ததாக இவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் சமீபகாலமாக கச்சேரிகள் நடத்துவதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ், ஏ.ஆர். ரஹ்மான் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் நேற்று ஹரிஷ் ஜெயராஜ் கச்சேரி நடந்துள்ளது. இதில் இயக்குநர் கவுதம் மேனனும் கலந்துகொண்டார். அப்போது ஹாரிஸ் இசையமைத்த அனேகன் படத்திலிருந்து டங்கா மாறி பாடல் ஒலித்தது.
அந்த சமயத்தில் ரசிகர்களுடன் சேர்த்து செம குத்தாட்டம் போட்டார் கவுதம் மேனன். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
GVM padu Vibe la irukkar ❤️😍pic.twitter.com/UDfX05BYvj
Listen News!