• May 04 2024

தைரியமான முயற்சியினை கௌதம் மேனன் செய்திருக்கிறார்- வெந்து தணிந்தது காடு குறித்து எஸ்.ஜே சூர்யா போட்ட டுவிட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தினை பார்த்து நடிகர் எஸ.ஜே கூர்யா பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும்  சுமார் 473 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தில் சிம்பு 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே இப்படம் எடுத்துக் காட்டி இருந்தது.


'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகர் எஸ் ஜே சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 


அந்த பதிவில், "இப்போது தான் VTK படத்தை பார்த்தேன் 🥰👍👍👍 அருமையான தைரியமான முயற்சி இயக்குநர் கௌதம் மேனன் 🥰👍 ரஹ்மான் சார் 👌💐👍 & என் நண்பன் 21 வயதான முத்து & முதிர்ந்த கேங்ஸ்டர் முத்து பாய் சிம்பு  sir👌🤗👍 வாழ்த்துகள் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் 💐💐💐👍" என எஸ் ஜே சூர்யா டுவிட் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement