• Apr 27 2024

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூலின் முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் நாயகனாக வளர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அதில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.கல்லூரி, அப்பா-மகன் சென்டிமென்ட் என கதைக்களம் அமைந்திருக்கிறது.

அதிலும் சென்டிமென்ட் காட்சிகள் மக்களை அதிகம் அழ வைத்துவிட்டதாக அனைவருமே கூறி வருகிறார்கள்.

மேலும் இப் படம் வெளியான முதல் வாரத்திலேயே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது. அடுத்து பெரிய நடிகரின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் டான் திரைப்படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

எனினும் தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே 7 நாள் முடிவில் ரூ. 46 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement