பிரபல நடிகராக காணப்படும் விஷால் அடிக்கடி அரசியல் தொடர்பான விஷயங்களிலும் தலை காட்டி வருகின்றார். இவர் விஜய்க்கு போட்டியாக 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் களம் இறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அடிக்கடி இவர் அரசியல் ரீதியாக பேசும் கருத்துக்களும் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், விஷால் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் இனிமேல் எந்த பேட்டியாக இருந்தாலும் இப்படி மைக்கை ஆட்டிக்கிட்டு தான் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
d_i_a
அதாவது மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வின் போது நடிகர் விஷால் உடல் சரியில்லாத நிலையில் கலந்து கொண்டார். இதன் போது அவர் மைக்கை பிடித்து பேசும் போது அவருடைய கைகள் நடுங்கி மிகவும் தளர்வாக காணப்பட்டார்.
இதை தொடர்ந்து விஷாலின் கைகள் நடுங்கிய சம்பவம் இணையதள பக்கங்களில் படு வைரலாக பகிரப்பட்டது. இதனால் அவருக்கு சார்பாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் சமீபத்தில் பேட்டி ஒன்றில், எனது கைகள் நடுங்கியதன் மூலம் எனக்கு எவ்வளவு பெரிய சப்போர்ட், ரசிகர்கள் இருக்கு என்று அறிந்து கொண்டேன். பலரும் எனக்கு போன் பண்ணி எனது உடல் நலம் பற்றி அறிந்து கொண்டார்கள் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது விஷால், இனி நான் இப்படி ஆட்டிகிட்டு தான் பேசப்போகின்றேன். இந்த நடுக்கம் எனக்கு பலதை கற்றுக் கொடுத்தது. பலரும் எனது நலனில் கவனம் செலுத்தினார்கள். அதனால் நான் இனி இவ்வாறு ஆட்டிக்கிட்டு தான் பேசப்போகிறேன். எனக்காக பலரும் பிரார்த்தனை பண்ணினார்கள். ரொம்ப நன்றி எல்லாருக்கும்.
ஒரு நிமிஷத்துல என்ன பற்றி உலகறிய செஞ்சிட்டாங்க. அதுல எத்தனை பேர் எனக்காக பிரார்த்தனை பண்ணி இருக்காங்க.. அதனால இனி எந்த பேட்டியா இருந்தாலும் இப்படி ஆட்டிகிட்டு தான் பேசுவேன் என விஷால் தெரிவித்துள்ளார்.
Listen News!