• May 18 2024

லியோ படத்தில் யாருக்கும் தெரியாமல் ஔிந்திருக்கும் ஐந்து ரகசியங்கள்! இன்னும் என்ன டுவிஸ்ட் எல்லாம் இருக்கோ?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் தான் லியோ. இப்படம் வெளியாக முன்னரே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். அந்தவகையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காத காரணத்தினால் இயக்குனர் லோகேஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். இதனால் இப்படத்தை பற்றி அதிக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனாலும் இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் இருக்கின்றதாம்.



தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஐஎம்எக்ஸ்ரெட் வி ரெப்டர் 8k கமரா பொருத்தப்பட்டு இருக்கிறது, அதனால் கண்டிப்பாக திரையில் லியோ படம் வேற லெவலில் காட்சி இருக்கும்,  தமிழ் சினிமாவை பாெறுத்தவரை நிறைய செக்கண்ட் பார்ட் படங்கள் வெளியாகி இருக்கின்றது. உலகநாயகன் கமல்ஹாசன்கூட இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஆனால் விஜய் இதுவரை தனது படங்களின் இரண்டாம் பாகம் எடுத்ததில்லை, ஆனால் லியோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் அதற்கேற்பவே கிளைமாக்ஸ் காட்சி எடுத்திருக்கிறார்களாம்.


லியோ படத்தின் மூலம் விஜய் இரண்டாம் பார்ட்டில் முதல் முறையாக நடிக்க இருக்கிறார் மேலும் இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் காஷ்மிரில் எடுக்கப்பட்டுள்ளது. மைனஸ் டிகிரியில் கிட்டதட்ட 150 நாட்கள் சூட்டிங் நடாத்தப்பட்டுள்ளது. ஆனால் விஜய் லியோ டத்தின் பூஜை போட்டபோது எப்படி இருந்தாரோ அப்படியே அதே எடையில் கடைசிவரை இருந்தாராம் இதற்காக தினமும் 40 நிமிடங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வாராம150 நாட்களும் ஒரே மாதிரியான உணவுமுறையே எடுத்திருக்கிறார். மேலும் சட்டை இல்லாமல் எடுக்கும் காட்சிக்கு பத்து நாட்களுக்கு முன் உடற்பயிற்சி மூலம் ஆம்ஸ் ஏற்றி கொள்வாராம்.


இப்படத்தில் பிரபல யூடியூப்பர்களான  இர்பான் மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் நடித்திருக்கிறார்கள். மேலும் என்னென்ன சுவாரஷ்யங்களை லோகேஷ் கனகராஜ் மறைத்து வைத்திருக்கின்றார் என்பது படம் வெளியானால் தான் தெரியவரும்.

Advertisement

Advertisement