• May 10 2024

குயின் வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் ஆரம்பம்- புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா கிருஷ்னன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் ஸ்ரோங் லேடி என்றும் அழைக்கப்பட்டு வருகின்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சிறந்த நடிகையாக வலம் வருகின்றார்.

அத்தோடு சமீபகாலமாக கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகத்திலும் ராஜமாதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரது நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான வெப் தொடர் தான் குயின். இந்த தொடரானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

கௌதம் மேனன்- பிரசாந்த் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கிய இத் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு மீண்டும் ஜெயலலிதாவாக நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement