• May 19 2024

மேக்கப் போட்டு ஆணாக மாறிய ஷாக்கிங் வீடியோவைப் பதிவிட்ட நடிகை தமன்னா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார். இவரது நடனத்துக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் சமீபகாலமாக ஷோலோ ஹீரோயினாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் வெப் சீரியல்களிலும் நடித்து வருகின்றார். இதனால் படவய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார்.

சமீபத்தில் அவர் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு ஹாலிவுட் நடிகைகள் போல உடை அணிந்து சென்று இருந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.

இந்நிலையில் கடந்த வாரம் தமன்னா நடிப்பில் F3 படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அந்த படத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், மெஹரீன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

அந்த படத்தின் ஷூட்டிங் செய்யும்போது தமன்னா மேக்கப் போட்டு ஆணாக மாறி இருக்கும் வீடியோ ஒன்றை தமன்னா வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement