• May 02 2024

அடியாட்களை வைத்து கொலை செய்ய மிரட்டல்.. ராணா மீது அதிரடிப் புகார்.. பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ராணா. இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் தன்னுடைய முதல் படத்துக்கே, சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார்.


இதனைத் தொடர்ந்து பின்பு தமிழ், ஹிந்தி ஆகிய மொழப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்திருந்த 'பாகுபலி' திரைப்படம் ராணாவை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்தது.


இந்நிலையில் தற்போது ராணா மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் பாபு ஆகியோர், சட்ட சிக்கலில் தற்போது சிக்கியுள்ள சம்பவமானது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராணா மற்றும் அவரின் தந்தை மீது, தொழிலதிபர் பிரமோத் குமார் என்பவர் புகார் ஒன்றினை அளித்துள்ளார். 


அதில் அவர் கூறுகையில் "கடந்த 2014 ஆம் ஆண்டு, தனக்கு சொந்தமான இடத்தில் ஹோட்டல் அமைக்க போவதாக கூறி ராணா மற்றும் அவரின் தந்தை தன்னிடம் குத்தகைக்கு எடுத்தனர். அவர்களுக்கு எழுதி கொடுத்த குத்தகைக்கான காலம் 2018 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் பாபு தனக்கு சொந்தமான அந்த இடத்தை 18 கோடிக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார், ஆனால் ராணா மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது என பிரச்சனை  செய்துள்ளனர். இதனால் பிரமோத் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்யமுடியாமல் போனது.


இதுகுறித்து கேட்டால், தன்னை ராணாவும் அவரின் தந்தையும், அந்த இடத்தை தங்களிடம் ஒப்படைத்துவிட கூறி அடியாட்களை வைத்து கொன்றுவிடுவேன் என மிரட்டுவதாகவும், இது குறித்து ஏற்கனவே பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்  தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து இந்த புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் ராணா மற்றும் அவரின் தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார். ராணா மற்றும் அவரின் தந்தையினுடைய இந்த சம்பவமானது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement