• May 19 2024

இரண்டாவது திருமணத்தில் அழகான பெண் குழந்தையை பெற்ற அண்ணாத்த திரைப்பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினியின் அண்ணாத்த விஜய்சேதுபதியின் மாமனிதன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் அனிஷ் என்ற இயக்குநரை திருமணம் செய்திருந்தார். இருப்பினும் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜா என்பவருடன் காதல் மலர்ந்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.

எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் வந்துள்ளார் என்றும் அவருக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் தேவை என்றும் அஞ்சலி நாயர் பதிவு செய்துள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

இது தவிர மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இதுவரை 100 விளம்பரங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement