• May 07 2024

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நமிதாவின் வேற லெவல் போட்டோ ஷுட் வீடியோ-லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை நமிதா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

இவர்களைத் தவிர சத்யராஜ், சரத்குமார்,லாரன்ஸ், பிரசாந்த, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். மேலும் சில காலம் சரியான படவாய்ப்புக்கள் அமையாததால் வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு, தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த பதவில், ”உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லப்போகிறேன். அதை என் பிறந்தநாளில் அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நமீதா, நிறைமாத கர்ப்பத்துடன் தனது போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையிலும் மற்றொரு பிங்க் நிற உடையிலும் இந்த போட்டோஷூட்டில் நமிதா தோன்றியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement