• May 17 2024

11 ஆண்டுகள் பின்பு மீண்டும் சந்திக்கவுள்ள தல,தளபதி… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத உச்சத்தில் தனெக்கென ஓர் இடத்தை பெற்ற நட்சத்திரங்களில் தல அஜித் , தளபதி விஜய் முக்கியமானவர்கள் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித்தும் விஜய்யும் சந்திக்க வாய்ப்புள்ளது என்ற ஒரு செய்தி தற்போது இணையத்தில் கசிந்து வருகின்றது .

தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் தங்கள் கால்களை ஒரே நேரத்தில் தடம் பதித்தனர் . தமக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டனர். ஆரம்பகாலத்தில் இருவரும் காதல் படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினர்.இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகினார்கள்.

2000 ஆண்டுகளின் பின்பு ஆக்ஷன் ஹீரோக்களாக நடிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டனர் .இதனடிப்படையிலேயே இவர்கள் இருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் அணிதிரண்டனர்.இவர்களை போட்டி நடிகர்களாக ரசிகர்கள் பாவித்தனர்.

அந்தவகையில் நடிகர் அஜித், விஜய் சந்திக்கவுள்ள செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன .

ஆரம்பத்தில் இருந்தே நட்பு பாராட்டி வரும் அஜித் - விஜய், கடைசியாக சந்தித்துக் கொண்டது என்றால் அது மங்காத்தா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான். விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் ஷுட்டிங்கும், அஜித் நடித்த மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்தது.இந்த சந்திப்பு நிகழ்ந்து 11 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகின.

இந்நிலையில் அஜித்தின் AK61 படத்தின் படப்பிடிப்பும் தளபதி 66 படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடந்துகொண்டிருக்கிறது. இரு படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடைபெறுவதனால் அஜித் மற்றும் விஜய் சந்தித்துக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. .

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement