• Jul 05 2025

பிறந்த நாள் அன்று வெளியான ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு ...!அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , இசையமைப்பாளருமாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் இன்று தனது 39வது  பிறந்த நாளை கொண்டடுகின்றார். மேலும் இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளார். 


மேலும் "வெயில்" என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியவருக்கு  முதல் படமே செம ஹிட் கொடுத்தது. இதற்கு முன் ஜென்டில்மேன் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானவர். தற்போது  ஹீரோவாக நடித்து  வருகிறார்.  மேலும் "விவேக்" இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13, இந்த ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.


மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் "இடிமுழக்கம்" என்ற படத்தில் நடித்திருக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் பிரபல பாடகி சைந்தவியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறு காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார் .


இன்று தனது  39 வது பிறந்த நாளை கொண்டாடும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என  திரைத்துறையை கலக்கி வரும் இவர் சொத்து மதிப்பு ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும்  என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷி அவர்களுக்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

Advertisement

Advertisement