• Apr 27 2024

பாத்ரூமில் கதறிக் கதறி அழும் அசீம்... ஆறுதல் சொல்லும் ஏடிகே... வெளியான வீடியோ... ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது அடுத்து என்ன நடக்கும் என்ற வகையில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணமே இருக்கிறது. மேலும் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், தனலட்சுமி, ஷிவின், மணிகண்டா, குயின்ஸி, அமுதவாணன், ஏடிகே என ஒருத்தர் விடாமல் அனைவரிடமும் சண்டை போட்ட ஒரே ஆள் என்கிற பெயரை எடுத்துள்ளார் அசீம். 


அதுமட்டுமல்லாது எதற்கு எடுத்தாலும் சண்டை தான் போடுகிறார், இவருடன் யாரும் ஒண்ணா வாழ முடியாது என்கிற அளவுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் அசீமை ஒதுக்கி வருவதும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

அத்தோடு யார் சொன்னாலும், கேட்க மாட்டேன் என்றும் தான் வைத்தது தான் சட்டம் எனவும் இறுமாப்போடு  விளையாடி வருகிறார் அசீம். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் அனைவரும் அசீமைத் திட்டி இருந்தார்கள். அதாவது அசீம் அமுதவாணனைப் பார்த்து "ஏன் இவ்வளவு கேவலமாக, ஷீப்பாக விளையாடுறீங்க" எனக் கேட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து "யாராவது ஷீப்பு, கேவலம் என்று சொல்லி அசிங்கமாக பேசுவாங்களா, உனக்கு யார் இவ்வளவு றைற்ஸ் கொடுத்தது" என அமுதவாணன் கேட்டிருந்தார்.

அதற்கு உடனே விக்ரமன் "ரௌடித்தனம் பண்ணிட்டு இருக்கீங்க" எனக் கோபத்தில் கூறி கத்தியிருந்தார். மேலும் "கண்ணாடியில் நீ நிண்டால் எட்டி உதைச்சிட்டுப் போவன் எண்டுறியே, நீ என்ன ரவுடியா" எனவும் அசீமிடம் கேட்டு விளாசி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அசீம் பாத்ரூமுக்குள் சென்று விக்கி விக்கி அழுது கொண்டிருக்கின்றார். இதனால் ஏடிகே சென்று "அழாதே அழாதே" எனக்கூறி அவரை சமாதானப்படுத்துகின்றார். அதுமட்டுமல்லாது "நான் விளங்கி கொள்கிறேன், நீ ஒரு டீசன்ற் ஆன ஆள்" எனவும் கூறுகின்றார்.


அதற்கு உடனே அசீம் "யாருமே சப்போர்ட் பண்ணவில்லை" எனக்கூறி அழுகின்றார். அதற்கு ஏடிகே "நான் சப்போர்ட் பண்ணுகிறேன்" எனக் கூறி மீண்டும் மீண்டும் சமாதானப் படுத்துகின்றார்.

அதுமட்டுமல்லாது "எல்லாத்தையும் மன்னிச்சிட்டு வெளியே வா" எனக் கூறி அசீமை சமாதானப்படுத்தி அழைத்து வருகின்றார். அசீம் அழுவதை பார்த்த ரசிகர்கள் பலரும் "அசீம் சண்டை போட்டுத்தானே பாத்திருக்கோம், இப்ப என்ன இப்படி அழுகின்றார்" எனக் கேட்டு ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement