• Jul 29 2025

ரஜினியின் ‘கூலி’ பட டிரைலர்-இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

Roshika / 8 hours ago

Advertisement

Listen News!

விஜய்யின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த பெரிய படம் ‘கூலி’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.இந்த பான்டா பாக்ஸ் படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான், பூஜா ஹெக்டே, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.


படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிடு’ பாடலும், இரண்டாவது சிங்கிள் ‘மோனிகா’ பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடல் யூட்யூபில் வைரலாகியுள்ளது. இந்த நிலையில், ரஜினியின் ‘கூலி’ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.இது ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவரும் முதல் படம் என்பதால், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement