பிரபல இசையமைப்பாளர் அனிருத் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முந்தைய மாதம் 26ம் தேதி திருவிடந்தையில் நடைபெறவிருந்த ‘Hookk’ இசை நிகழ்ச்சி, பாதுகாப்பு காரணங்களால் அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. பின்னர், வரும் ஆகஸ்ட் 23ம் தேதி (நாளை) கூவத்தூரில் உள்ள மார்க் சொர்ணபூமியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பனையூர் பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அனுமதி இல்லாமல் மாபெரும் கூட்டம் ஏற்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் மனுவில் கூறினார். வழக்கறிஞர் திருமூர்த்தி வழக்கை முன்னிலைப்படுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அனிருத் இசை நிகழ்ச்சிக்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்தார். மேலும், காவல்துறையின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமாயின் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பின் மூலம், அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெற உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Listen News!