• May 17 2024

சந்தானத்துக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை! டீசரே பில்டப்பா இருக்கே..!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

'பூவே உனக்காக' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ராதிகா ப்ரீத்தி. இவர் தற்போது சந்தானத்துக்கு ஜோடியாக பில்டப் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட சில நடிகைகளின் வரிசையில்  தற்போது சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தியும் இணைந்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'பூவே உனக்காக' சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி. எனினும், ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். 


அத்துடன்,தமிழில் எம்பிரான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர்  கன்னடாவிலும் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 

இவ்வாறான நிலையில், தற்போது சந்தானம் நாயகனாக நடித்துள்ள 'பில்டப்' படத்தில் ராதிகா ப்ரீத்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இதேவேளை, இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. 80-களில் நடைபெறும் கதையை மையமாகவும், காமெடியை அடிப்படையாகவும் வைத்து குறித்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement