• May 18 2024

லியோ பெயர் கெடும் வகையில் நடந்தேறும் சம்பவம்.... திரையரங்கு உரிமையாளர்களின் அட்டூழியம்... நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்.

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

வெற்றி திரைப்படம் லியோ சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போதும் அதன் பெயரை கெடுக்கும் வகையில் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ,திரிஷா மற்றும் சினிமா நட்சத்திரங்கள் நடிப்பில் தரமான  சம்பவங்களுடன் திரைக்கு வந்த லியோ. ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நல்ல வசூலையும் பெற்று வருகிறது. ரசிகர்களால் கொண்டாடப்படும் லியோ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி உலகளாவிய ரீதியில் திரையிடப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் திரையரங்கு உரிமையாளரே அதிக விலையில் லியோ படத்தின் டிக்கட்டுகளை ப்ரோக்கர் மூலமாக ப்ளாக்கில் விற்பனை செய்கிற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 


மேலாளர் ஹெலி என்பவர் 190 ரூபாய் டிக்கட்டுகளை ப்ளாக்கில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யும் சம்பவம் நடந்து வரும் நிலையில் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என் கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்றால் லியோ திரைப்படத்தில் மீதுதான் கெட்ட பெயர் உண்டாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.       

Advertisement

Advertisement