விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஹிட்டான சீரியல்கள், கலகலப்பான நிகழ்ச்சிகள் என சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் அநேகமான ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு சிறப்பாக ஒளிபரப்பான "ஜோடி ஆர் யூ ரெடி" டான்ஸ் ஷோவின் அடுத்த சீசன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இந்த ஷோவிற்கு புதிதாக பிரபல நடிகை வரஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்ச்சில் கடந்த ஆண்டு சிறப்பாக ஆரம்பித்து நிறைவடைந்த ரியாலிட்டி ஷோ தான் ஜோடி ஆர் யூ ரெடி இந்த நிகழ்ச்சியை நடிகர் ரியோ ராஜ் தொகுத்து வழங்கினார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகை ஸ்ரீதேவி, நடிகை மீனா ஆகியோர் சிறப்பான நடுவர்களாக இருந்தார்கள்.
பல போட்டியாளர்கள் புதிய புதிய சுற்றுகள் அமோகமான நடனங்கள் என அழகாகஅரங்கேறிய இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் புதிய சீசனில் மீனாவிற்கு பதில் நடுவராக பிரபல நடிகை ரம்பா வர இருக்கிறார். அந்த தகவல் தற்போது வெளியான நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக கமென்ஸ்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!