• Dec 01 2022

ரஜினியின் 170 வது திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை-வெளியான சூப்பர் தகவல்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.இவரது நடிப்பில் இறதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் இயக்குநராக கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சனை ரஜினி தேர்வுசெய்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் அறிவிப்பினால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படத்திற்கு ஜெயிலர் என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறுஇருக்கையில்  அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.


அதன்படி அரவிந்த் சாமி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன்  இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷினியும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.