• May 05 2024

தனுஷ் நடிப்பில் உருவான தி கிரே மேன் திரைப்படத்திலிருந்து பிரத்தியேகமாக வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகிய ஆங்கிலத் திரைப்படம் தான் தி கிரே மேன். இப்படத்தை அவெஞ்சர்ஸ் இயக்குநர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

இப்படத்தில் தனுஷுடன் இன்னும் மூன்று முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார்.

அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் என்று பகிர்ந்திருந்தார். அதே போல சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது.

ஆனால் ட்ரெய்லரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமானதாக அமைந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான கிறிஸ் இவான்ஸ் மற்றும் ரையான் கோஸ்லிங் ஆகியோர் சம்மந்தபட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்று இணையத்தில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ துணுக்கு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement