• May 06 2024

அங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு தான் ஆபத்து..! திக் திக் காட்சிகளுடன் வெளியான நயன்தாராவின் ட்ரைலர்!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நயன்தாரா.


அதுமட்டுமல்லாமல் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்,

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.


இந்நிலையில் நடிகை நயன்தாரா மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது. 


இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்,  பாலிவுட் நடிகர் அனுபம் கேர் போன்ற பலர் நடித்துள்ளனர்.


ஹாரர் மற்றும் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி உள்ள படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது. திக் திக் நிமிடங்களுடன் நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement