• May 03 2024

லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் வசூலில் வாரிக் குவிக்கும் போர் தொழில் திரைப்படம்- இத்தனை கோடி வசூலா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சமீபகாலமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவெற்பைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று வருகின்றன. அந்த வகையில் லவ் டுடே, டா டா, குட் நைட், அயோத்தி போன்ற படங்களை இதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் போர் தொழில்.விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் தான் இது. இப்படம்  கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியாகியது. இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற துவங்கியது.


இந்நிலையில் லோ பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ.28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இந்த வருடம் அதிக லாபத்தை கொடுத்த படத்தின் வரிசையில் போர் தொழில் இணைந்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement