• May 18 2024

உங்களில் இருந்தும்..பிக்பாஸ் பற்றி அடுத்த அப்டேட் கொடுத்த கமல்-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி வண்ணம் உள்ளது.

ஒவ்வொரு ப்ரமோவிலும் அடுத்தடுத்த அப்டேட்களை கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிலிருந்து அவர் இடைவெளி எடுத்துள்ளார்.

விஜய் டிவியின் முக்கிய  நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் இதுவரை 5 சீசன்களை முடித்துள்ளது. அத்தோடு வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இதன் 6வது சீசன் ஆரம்பமாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

விக்ரம் படத்தின் சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கமிட் செய்து வருகிறார். அத்தோடு அவரது இந்தியன் 2 படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது படம் மீண்டும் தூசித்தட்டப்பட்டு படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக சென்னையில் இடம்பெற்றது.

மேலும் இந்த சூட்டிங்கில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். இதனிடையே ஷங்கர் இயக்கிவரும் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அடுத்தக்கட்ட சூட்டிங் ஒருமாத காலம் கழித்தே திட்டமிடப்பட்டுள்ளது



இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துக் கொள்ளவுள்ளார். அத்தோடு வரும் 9ம் தேதி இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது கமல்ஹாசனால் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சி 24 மணிநேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல பொதுமக்களில் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.அத்தோடு  ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் 3 நாட்களில் துவங்கவுள்ளதையும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்த சீசனில் அதிரடியான பல மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன.





Advertisement

Advertisement