• Jun 04 2023

எருமை சாணி விஜய்க்கு காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது...வெளியான புகைப்படத்தால் குவியும் வாழ்த்துக்ககள்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

எருமை சாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய்க்கும், அவருடைய காதலி நக்ஷத்ராவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எனினும் இதுகுறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம், தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதை கவந்தவர் விஜய்.  அத்தோடு இவரின் நகைச்சுவை பேச்சு, மற்றும் நடிப்புக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. யூடியூப் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம், அடுத்தடுத்து சில திரைப்பட வாய்ப்புகளையும், விஜய்க்கு பெற்று தந்தது.


அத்தோடு ஹிப் பாப் தமிழா ஆதி நடித்த மீசையை முறுக்கு, மற்றும்  நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் விஜய் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதன் பின்னர் நடிப்பில் இருந்து, இயக்குநர் ட்ராக்குக்கு மாறிய விஜய், டி பிளாக் என்கிற படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கினார். அத்தோடு இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க அவரின் நண்பராக விஜய் நடித்திருந்தார். டி பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலையும் பெற்றது.


ஏற்கனவே எருமை சாணி விஜய் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த நிலையில், விரைவில் திருமணம் நடைபெற போவதையும் அறிவித்தார். அத்தோடு  இருவரும் அவ்வப்போது டேட்டிங் செய்து வந்த நிலையில், விஜய் - நக்ஷத்திரா ஜோடிக்கு இன்று, மிகவும் பிரமாண்டமாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

 

இதுகுறித்த புகைப்படத்தை விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். மேலும் இருவரும் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருப்பதாக கூறி, உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கைத்துணையாக ஏற்கிறேன் ஏற்கின்றேன்... இனிமேல் புயல் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே என்கிற பாடல் வரிகளுடன்... காதலியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement