• May 04 2024

கழுகா? தங்கமா? தலைவர் படத்திற்கு டைட்டில்? தாறுமாறாக மூளையை கசக்கி லோகேஷ் ட்வீட்!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த திரைப்படம் ரஜினிகாந்துக்கு நல்ல கம்பேக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த் கேமியா ரோலில் லால் சலாம் படத்தில்  நடித்திருந்தார். ஆனாலும் அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் தனது அப்பா ரஜினிகாந்த் எனவும்  ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது எனவும் உருட்டி இருந்தார் ஐஸ்வர்யா.

இதை அடுத்து ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வர நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171 வது படத்தில் நடிப்பதற்கும் கமிட் ஆகியுள்ளார். 


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படும் லோகேஷ் கனகராஜ், விஜய், சூர்யா, கார்த்திக் போன்ற பிரபல நட்சத்திரங்களை வைத்து தாறுமாறாக படம் இயற்றி வெளியிட்டிருந்தார். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில்,  தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது திரைப்படத்திற்கான தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 171 படத்துக்கு 'டைட்டில்' கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



 

Advertisement

Advertisement

Advertisement