• May 04 2024

100 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்த 'தசரா'.. மண்ணைக் கவ்விய 'விடுதலை' மற்றும் 'பத்து தல'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற அறிமுக இயக்குநர் வித்தியாசமான கதையம்சம் நிறைந்த வகையில் இயக்கி உள்ளார்.

நானி நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது தசரா மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.


மேலும் தசரா திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. விமர்சகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்றாலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் வெளியான நாள் முதல் நல்ல வசூலை கொடுத்து வரும் தசரா திரைப்படம் ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். அத்தோடு இந்த வார இறுதியிலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பதனால் இப்படம் ரூ. 200 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.


அதுமட்டுமல்லாது தசரா படத்துக்கு போட்டியாக தமிழில் வெற்றிமாறனின் விடுதலை மற்றும் சிம்பு நடித்த பத்து தல ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடியை கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தசரா படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement