• May 04 2024

இலக்கியா சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்- இனிமேல் இவருக்கு பதிலாக யார் நடிக்கப் போறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் ஏராளமான சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நான் பிரைம் டைமில் ஒளிப்பரப்பானலும், பிரைம் டைம் சீரியலுக்கு நிகரான ரசிகர்களை பெற்றிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் இலக்கியா.

இந்த சீரியலில் நடிகை ஹீமா பிந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் நந்தன் நடிக்கிறார்.ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்து மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் அந்த சீரியலில் பைரவி கதாப்பாத்திரம் தான். அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை ராணி நடித்து வந்தார்.


 அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாகவும் அவர் இருந்தார்.ஆனால் தற்போது சீரியலில் இருந்து ராணி விலகியுள்ளார். என்ன காரணம் என்று இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் இன்று முதல் பைரவி கதாப்பாத்திரத்தில் நடிகை பிரியா பிரின்சி நடிக்கவுள்ளார்.


அவர் ஏற்கனவே கண்ணான கண்ணே சீரியலில் மேனகா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் . இருந்தாலும் இப்படி மாத்தியிருக்க கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.இவர் இந்த காரக்டருக்கு பொருந்துவாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement